ராஜதந்திரிமார் போர்க்கொடி

ராஜதந்திரிமார் போர்க்கொடி

/ Wednesday, 11 October 2017 06:18

முன்னாள் இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வாவிற்கு பங்களாதேஷ் தூதுவர் பதவி வழங்கப்பட்டதில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலருக்கு வருத்தமாம்.
தகைமையான இராஜதந்திர அறிவுடைய அதிகாரிகள் இருக்கையில் இப்படி வெளியிலிருந்து ஆட்களை நியமிப்பது ஏற்புடையதல்லவெனக் கூறி மூத்த அதிகாரிகள் பலர் பிரதமரிடம் இதுபற்றிக் கூறவும் முடிவெடுத்துள்ளனராம்.

""அப்படியானால் நாங்கள் ஓய்வு பெற்றவுடன் எங்களைப் படைத்தளபதியாக நியமியுங்கள். தளபதிமார் தூதுவர்களாக மாறும்போது இராஜதந்திரிமார் ஏன் தளபதிகளாக மாறக்கூடாது'' என்று கிண்டலாகக் கேட்கிறார் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர். வாஸ்தவம் தான்.

Please publish modules in offcanvas position.