சிக்கிய செயலர்

சிக்கிய செயலர்

/ Thursday, 12 October 2017 04:16
தாய்வான் வங்கிக்கணக்கில் இருந்து இலங்கையின் வங்கி  ஒன்றுக்குப் பெருமளவு பணம் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முக்கியமான அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் மீது புலனாய்வுத்துறையினரின் கவனம் திரும்பியுள்ளது.
 
இந்தத் தகவல் அமைச்சரின் காதுகளுக்கும் சென்றுள்ளதாம்.
 
எப்படியோ இந்த விடயத்தில் தலையிடாதிருக்கத் தீர்மானித்துள்ள அந்த அமைச்சர், விரைவில் இந்தச் செயலரை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துவிட்டாராம். 
 
மங்களகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி செயலருக்கு அந்த அமைச்சர் அர்ச்சனை செய்ததாகவும் கேள்வி.

Please publish modules in offcanvas position.