கோபமடைந்த தலைவர்

கோபமடைந்த தலைவர்

/ Thursday, 12 October 2017 04:21
இலங்கை அரசுடன் செய்துகொண்ட தொலைத்தொடர்பு ஒப்பந்தம் ஒன்றின்  பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து மலேசிய அரசின் உயர்மட்டத்  தலைவர் ஒருவர் இலங்கை அரசின் உயர்மட்டத் தலைவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வறுத்தெடுத்தாராம்.
 
"சொன்னால் சொன்னபடி நடக்க வேண்டும். அல்லது  ஒப்பந்தங்களைப் போட்டிருக்கக் கூடாது. நாங்கள் உங்களது நாட்டில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டியுள்ளோம். 
 
உங்களுக்கு இயலாத பட்சத்தில் பணத்தையாவது திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். யோசித்து நிதானமாக நடந்துகொள்ளுங்கள்'' என்று காரசாரமாக சொல்லிவிட்டு தொலைபேசிஅழைப்பை துண்டித்தாராம் அந்த அரச தலைவர். 
 
இந்த அழைப்புக்குப் பின்னர் நம் நாட்டுத் தலைவர் தொலைத்தொடர்புடன் சம்பந்
தப்பட்ட அதிகாரிகளை அழைத்து வெளுத்து வாங்கினாராம்....
 
உள்நாட்டிலும் திட்டு... உலக நாடுகளில் இருந்தும் திட்டு.

Please publish modules in offcanvas position.