லிட்ரோ கேஸ் தலைவருக்கு வெளிநாடு செல்லத் தடை

லிட்ரோ கேஸ் தலைவருக்கு வெளிநாடு செல்லத் தடை Featured

/ Wednesday, 11 October 2017 05:38
 தாய்வான் வங்கியொன்றின் கணினிக் கட்டமைப்பில் ஊடுருவி 60 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட "லிட்ரோ கேஸ்' நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ். முனசிங்கவுக்கு வெளிநாடு  செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
நேற்றுமுன்தினம் மாலை கைதுசெய்ப்பட்ட அவர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, மேலதிக நீதிவான் ஜெயராம் ட்ரொஸ்கி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 
 
அத்துடன் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
 
என்.எம்.எஸ்.முனசிங்கவின் வங்கிக் கணக்கில் தாய்லாந்து வங்கியிலிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கருதப்படும் 110 மில்லியன் ரூபா பணம், வைப்பில் இருந்ததாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்தன.

Please publish modules in offcanvas position.