பிரபாகரனின் சடலத்தைப் பார்த்து  கலங்கினோம் -ராகுல் உருக்கம்

பிரபாகரனின் சடலத்தைப் பார்த்து கலங்கினோம் -ராகுல் உருக்கம் Featured

/ Wednesday, 11 October 2017 06:12
"பிரபாகரனின் சடலத்தைப் பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம்.''என  காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தின் வதோதராவில் நேற்றுமுன்தினம் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். இலங்கையில் இறுதிப் போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "பிரபாகரனின் சடலத்தைப் பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்தோம். பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால் துயரமடைந்தேன். மற்றவர்களின் துயரங்களில் பங்குகொள்வதுதான் காந்தி குடும்பத்தின் பாரம்பரியம்'' என்று தெரிவித்துள்ளார். 

Please publish modules in offcanvas position.