முனசிங்ஹவிற்கு மீண்டும் விளக்கமறியல்; குற்றச்சாட்டை மறுக்கின்றது லிட்ரோ

முனசிங்ஹவிற்கு மீண்டும் விளக்கமறியல்; குற்றச்சாட்டை மறுக்கின்றது லிட்ரோ Featured

/ Wednesday, 11 October 2017 07:43

தாய்வானில் பா ஈஸ்டர்ன் வங்கியின் கணனி வலையமைப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் லிட்ரோ கேஸ் (சமையல் எரிவாயு) நிறுவனத்தின் தலைவர் சலீல முனசிங்ஹ மீண்டும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

பா ஈஸ்டர்ன் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள வங்கிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டாதக தெரிவிக்கப்படும் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி அரச வங்கியின் தனிநபர் ஒருவரின் கணக்கில் காணப்பட்ட நிலையில், நேற்றுமுன் தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சலீல முனசிங்ஹவை நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இன்றைய தினம் வரை விளக்கமிறயிலில் வைக்கப்பட்டார். மீண்டும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கணனியின் செயற்பாடுகளை குழப்பும் கட்டளையினை (வைரஸ்) உட்புகுத்தி தாய்வான் பா ஈஸ்டர்ன் வங்கி கணக்கிற்குள் சட்டவிரோமாக பிரவேசித்து 60 மில்லிய்ன டொலர்களுக்கும் அதிகமான நிதி வேறு நபர்களின் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிறிதொரு கணனி வலையமைப்பிற்குள் சட்டவிரோதமாக ஊடுறுவதில் வல்லமை பெற்றவர்கள் (ஹேக்கர்ஸ்) குறித்த வங்கியின் கணக்கு பதிவிற்குள் பிரவேசித்து 50 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இணையள கொள்ளை (சைபர்) மூலம் இலங்கைக்கு 1.3 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஸவிப்ட் சர்வதேச நிதி பரிமாற்று அமைப்பின் வாயிலான கடந்த வியாழக்கிழமை இந்த நிதி பரிமாற்ற மோசடி செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு மாத்திரமின்றி கம்போடியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் நிதிபரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோத நிதி பரிமாற்றம் மூலம் இலங்கையில் பணத்தினை மீளப் பெற்றுக்கொள்ள முயசித்த இருவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதியவியல் விசாரணை பிரிவு மேற்கொண்டு வருவதுடன், தாய்வானின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்குழுவொன்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சலீல முனசிங்கவிற்கும் சைபர் தாக்குதல் மூலம் இடம்பெற்றதாக கூறப்படும் தாய்வான் வங்கிக் கொள்ளை சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please publish modules in offcanvas position.