பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா பண்டிகை முற்பணம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா பண்டிகை முற்பணம் Featured

/ Wednesday, 11 October 2017 09:22

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 10,000 ரூபாவை உடனடியாக வழங்குமாறு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவோடும் இன்னும் இதர செலவுகளை கருத்திற் கொண்டு இம்முறை தீபாவளி பண்டிகை முற்பணத்தை 10,000 ரூபாவாக அதிகரித்து உடன் வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் மு.சிவலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் “பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் தமது விசேட தினங்களை கொண்டாடுவதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

வருடத்தில் ஒருமுறை வரும் இப்பெருநாளை கொண்டாடுவதற்கு பணவசதிகள் இல்லாது பெரும் சிரமத்திற்குள்ளாகி வரும் இவ்வேளையில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உளளப்படியால் வழமையாக வழங்கும் தொகை அவர்களுக்கு போதுமானதாக இல்லலை.

தோட்டக் கம்பனிகள் இது விடயத்தில் உரிய கவனத்தை செலுத்த நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 10,000 ரூபாவை பண்டிகை முற்பணமாக வழங்க இலங்கை முதலாளிமார் சம்மேளனம் காலந்தாழ்த்தாது மிக விரைவாக வழங்கப்பட வேண்டும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please publish modules in offcanvas position.