சீனாவுடன் இணைந்து செயற்படும்  நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சீனாவுடன் இணைந்து செயற்படும் நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் Featured

/ Wednesday, 11 October 2017 10:40

சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரியான றியர் அட்மிரல் டொனால்ட் டி கப்ரியேல்சன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிராந்தியத்தில் ௲ குறிப்பாக இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை பற்றி அமெரிக்கா கவலை கொண்டுள்ளதா என்று இலங்கை வந்துள்ள றியர் அட்மிரல் மொனால்ட் டி கப்ரியேல்சனிடம் எழுப்பட்டிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சில விடயங்களில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாததால், சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சீனா தற்போது நன்மைகளை பெற்றுக்கொண்டிருக்கும் அமைப்பு முறையை மறுசீரமைக்க முயல்கிறது. இது கவலையளிக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Please publish modules in offcanvas position.