ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது

ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது Featured

/ Thursday, 12 October 2017 06:12

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை ரயில் போக்குவரத்து பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடருமென தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து சேவையை ஆரம்பிக்கும் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

நேற்றிரவு ரயில்வே ஊழியர்கள் ஆரம்பித்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தன.

ரயில்வே உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவித்து இந்த பணி புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றிரவு புறக்கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தை மேற்கொள்வதற்காக வந்த பயணிகள் திடீரென ஆரம்பமான பணிப்புறக்கணிப்பால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதோடு, அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தது.

இதனை அடுத்து மருதானை மற்றும் புறக்கோட்டை ரயில் நிலையங்களுக்கு பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please publish modules in offcanvas position.