சர்ச்சைக்குரிய நிதி மோசடி; விசாரணைக்கு தாய்வான் அதிகாரிகள் வருகை

சர்ச்சைக்குரிய நிதி மோசடி; விசாரணைக்கு தாய்வான் அதிகாரிகள் வருகை Featured

/ Thursday, 12 October 2017 07:07

தாய்வான் நாட்டின் வங்கி அதிகாரிகள் மற்றும் இரு புலனாய்வு உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வானில் பா ஈஸ்டர்ன் வங்கியின் கணனி வலையமைப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக கூறி லிட்ரோ கேஸ் (சமையல் எரிவாயு) நிறுவனத்தின் தலைவர் சலீல முனசிங்ஹ கைத செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத பணப்பறிமாறல் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா ஈஸ்டர்ன் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள வங்கிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டாதக தெரிவிக்கப்படும் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி அரச வங்கியின் தனிநபர் ஒருவரின் கணக்கில் காணப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கணனியின் செயற்பாடுகளை குழப்பும் கட்டளையினை (வைரஸ்) உட்புகுத்தி தாய்வான் பா ஈஸ்டர்ன் வங்கி கணக்கிற்குள் சட்டவிரோமாக பிரவேசித்து 60 மில்லிய்ன டொலர்களுக்கும் அதிகமான நிதி வேறு நபர்களின் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிறிதொரு கணனி வலையமைப்பிற்குள் சட்டவிரோதமாக ஊடுறுவதில் வல்லமை பெற்றவர்கள் (ஹேக்கர்ஸ்) குறித்த வங்கியின் கணக்கு பதிவிற்குள் பிரவேசித்து 50 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிருந்தன.

இந்நிலையில் இணையதள கொள்ளை (சைபர்) மூலம் இலங்கைக்கு 1.3 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please publish modules in offcanvas position.