லஹிரு, சுததானந்த ஆகியோருக்கு விளக்கமறியல்

லஹிரு, சுததானந்த ஆகியோருக்கு விளக்கமறியல்

/ Thursday, 12 October 2017 10:06

நீதிமன்ற உத்தரவினை மீறிய அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர, மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் மாணவ குழுவின் ஒருங்கிணைப்பாளர் டெம்பிட்டியே சுததானந்த தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

சைட்டம் வைத்திய கல்லூரிக்கு எதிராக நேற்று முன்தினம் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டமைக்காக குறித்த இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஆர்பாட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Please publish modules in offcanvas position.