முடிந்தது போராட்டம்; ஓடுகிறது ரயில்

முடிந்தது போராட்டம்; ஓடுகிறது ரயில் Featured

/ Thursday, 12 October 2017 14:14

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் காவலர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது ஆலோசனைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவுக்கும் புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையிலான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்து குறித்த பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Please publish modules in offcanvas position.