நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு வலுக்கிறது எதிர்ப்பு

நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கு வலுக்கிறது எதிர்ப்பு

/ Thursday, 12 October 2017 11:06

டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு வீரர்களின் தொழிற் சங்கம் தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் "சம்பிரதாயவாதிகள்" நான்கு நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு போதும் தங்கள் ஆதரவினை வழங்கப்போவதில்லை எனக் கூறியுள்ளது. அதேவேளை சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கங்களின் கூட்டமைப்பும் இந்த நான்கு நாட்கள் போட்டிகளுக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிகளை அறிமுகம் செய்வது தொடர்பாகவும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளுக்கான லீக் போட்டிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் நேற்றைய தினம் ஆரம்பித்து நாளைய தினம் வரை நடைபெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த நிலையிலேயே நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான எதிர்ப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

“டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தென்னாபிரிக்கா சிம்பாவே அணிகள் பங்குபற்றும் டெஸ்ட் போட்டி நான்கு நாட்கள் பரீட்ச்சார்த்த போட்டியாக நடாத்தப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் "நான்கு நாட்கள் போட்டிகளை பரீட்சிக்க வேண்டிய அவசியமில்லை. பல நாடுகளில் நான்கு நாட்கள் போட்டிகள் முதற் தரப்போட்டிகளாக நடைபெற்று வருகின்றன.

நான்கு நாட்கள் போட்டிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பது நன்றாகவே தெரிந்த விடயமே" என சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொனி ஐரிஷ் கூறியுள்ளார்.

Please publish modules in offcanvas position.